புதுச்சேரி

நாம் தமிழர் தொழிற்சங்கத்தினர் முற்றுக்கையிட்ட காட்சி.

நாம் தமிழர் தொழிற்சங்கம் முற்றுகை

Published On 2023-02-24 13:57 IST   |   Update On 2023-02-24 13:57:00 IST
  • நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் வி.ஜ.பி. நகரில் உள்ள கூட்டுறவுசங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
  • பாண்லே ஊழியர்கள், தொழிலாளர்களின் வாழ்வுரிமை, பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் வி.ஜ.பி. நகரில் உள்ள கூட்டுறவுசங்க பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரமேசு முன்னிலை வகித்தார். தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. மாநில செயலாளர் சிவக்குமார், யூனியன் தலைவர் மோகன்தாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாண்லே பால் பற்றாகுறையினை சீரமைக்க வேண்டும். நிர்வாகத்தை நஷ்டத்தில் தள்ளிய நிர்வாக அதிகாரி, இயக்குனர் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்லே ஊழியர்கள், தொழிலாளர்களின் வாழ்வு ரிமை, பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தடையின்றி பால் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்திலிருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

Similar News