வாக்காளர் பதிவு சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.
- புதுவை தேர்தல் துறை சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
- மேலும் ஆன்லைன் மூலம் பதிவு முறை பற்றி தே ர்தல் துறை அதிகாரிகள் விளக்கினர்.
புதுச்சேரி:
புதுவை தேர்தல் துறை சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாகூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவம், செவிலியர், என்ஜினீயரிங் கல்லூரிகளில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் உள்ள விநாயகா மிஷன் நர்சிங் கல்லூரியில் நடந்த முகாமில் பாகூர் தாசில்தார் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி பிரதீவ்ராஜ் மாணவர்களுக்கு வாக்காளர் பதிவு படிவம் வழங்கினார்.
மேலும் ஆன்லைன் மூலம் பதிவு முறை பற்றி தே ர்தல் துறை அதிகாரிகள் விளக்கினர். இந்த முகாமில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி துணை பதிவாளர் பெருமாள், கல்லூரி முதல்வர் சாரதா ஆகியோர் பங்கேற்றனர்.