புதுச்சேரி

கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

கால்நடை மருத்துவக்கல்லூரி ஊழியர்கள் போராட்டம்

Published On 2022-08-08 09:07 GMT   |   Update On 2022-08-08 09:07 GMT
  • புதுவை குருமாப்பேட் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 58 பேராசிரியர்கள் மற்றும் 120 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • அனைத்து ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை குருமாப்பேட் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 58 பேராசிரியர்கள் மற்றும் 120 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. உயர் அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த பலனும் இல்லாததை தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் அனைத்து ஊழியர்களும் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாக வாயிலில் அரை மணிநேரம் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதையொட்டி இன்று காலை கல்லூரியின் மருத்துவமனை வளாகத்தில் திரண்ட பேராசிரியர்கள் உடனடியாக நிலுவை சம்பளத்தை வழங்க கோரி முழக்கம் எழுப்பினர். இப்பிரச்சினையில் கவர்னர், முதல்-அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

Tags:    

Similar News