புதுச்சேரி

உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடைபெற்ற காட்சி.

உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை

Published On 2022-11-24 14:37 IST   |   Update On 2022-11-24 14:37:00 IST
  • அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது.
  • அதனை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது.

புதுச்சேரி:

அரியூர் அருகே பங்கூரில் உள்ள நவாம்பிகை உடனுறை, நவகோல் லிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உலக மக்கள் நன்மை வேண்டி மகா உருத்திர பெருவேள்வி பூஜை நடைபெற்றது. திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து  2 மணிக்கு மேல் மகா உத்திர பெருவேள்வி நடைபெற்றது.  5 மணிக்கு மகா வேள்வி, கலச புறப்பாடு, சிறப்பு கலச அபிஷேகம், அமுது படையல், பேரொளி வழிபாடு நடைபெற்றது.

இந்த மகா வேள்வி பூஜையில் பங்கூர், அரியூர், நவமாள்காப்பேரி, பள்ளித்தென்னல், சிவராந்தகம், கண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News