தனியார் காம்ப்ளக்சில் டி.வி.-பணம் திருட்டு
- தவளகுப்பத்தில் தனியார் காம்ப்ளக்சில் புகுந்து அறைக்கதவை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
- புதுவை தவளக்குப்பம் முத்து முதலியார் நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் முதல் மாடியில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி புதுவை பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை காண்டிராக்டர் எடுத்து செய்து வருகிறார்.
புதுச்சேரி:
தவளகுப்பத்தில் தனியார் காம்ப்ளக்சில் புகுந்து அறைக்கதவை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
கடலூர் திருவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33) இவர் புதுவை தவளக்குப்பம் முத்து முதலியார் நகரில் உள்ள தனியார் காம்ப்ளக்சில் முதல் மாடியில் ஒரு அறையை வாடகை எடுத்து தங்கி புதுவை பொதுப்பணித்துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை காண்டிராக்டர் எடுத்து செய்து வருகிறார்.
தினமும் காலை அவர் 9 மணிக்கு தான் தங்கியிருக்கும் அறையில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் திரும்புவது வழக்கம் அதுபோல் சம்பவத்தன்று காலை தான் தங்கியிருந்த அறையை பூட்டி விட்டு மணிகண்டன் பணியை பார்வையிட சென்றார். பின்னர் இரவு 7 மணிக்கு அறைக்கு வந்து பார்த்த போது அறைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு மேஜையில் வைத்திருந்த சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. மற்றும் ஸ்டெபிலைசர் டைரியில் வைத்திருந்த ரொக்க பணம் 6ஆயிரத்து 300 ஆகியவை திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு அறை கதவு பூட்டை உடைத்து டி.வி. மற்றும் ரொக்க பணத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து மணிகண்டன் தவளகுப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.