கோப்பு படம்
- வம்பாகீரப்பாளையத்தில் வழக்கை வாபஸ் பெறக்கோரிமீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வம்பாகீரப்பாளையத்தில் சண்முகம் என்பவர் தரப்பினருக்கும், சுந்தர்ராஜ் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி:
வம்பாகீரப்பாளையத்தில் சண்முகம் என்பவர் தரப்பினருக்கும், சுந்தர்ராஜ் தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது.
அப்போது சண்முகம் தாக்கப்பட்டதற்கு ஊர்க்காரர் என்ற முறையில் அவருக்கு ஆதரவாக மீனவர் சந்திரன்(வயது46) ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் சந்திரன் தனது வீட்டு வாசலில் தனது மனைவியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வெள்ளையன் தகாத வார்த்தைகளால் சந்திரனை திட்டி அவரை தாக்கினார். எவ்வளவு தைரியம் இருந்தால் எனது உறவினர்கள் மீது போலீசில் புகார் செய்வாய், நீ உயிரோடு இருக்க வேண்டும் என்றால் உடனே வழக்கை திரும்ப பெற்றுக்கொள்.
இல்லையென்றால் கல்லை உனது தலையில் போட்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன சந்திரனை அவரது மனைவி வீட்டுக்குள் அழைத்து கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
பின்னர் வெள்ளையன் அங்கிருந்து சென்ற பின்னர் சந்திரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அதன்பிறகு ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.