புதுச்சேரி

தேரோட்டத்தை கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்த காட்சி.

திருக்காமீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

Published On 2022-06-11 11:12 IST   |   Update On 2022-06-11 11:12:00 IST
  • கவர்னர் தமிழிசை வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
  • கடந்த 3-ந் தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி:

வில்லியனூர் திருக்கா–மீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 3-ந் தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 13 நாட்கள் நடக்கும் விழாவில் 6-ந் தேதி பாரிவேட்டை நடந்தது. 8-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட 63 நாயன்மார்களுடன் உற்சவர்கள் வீதியுலா நடந்தது.

10.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் வீதியுலா நடந்தது. திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை தொடங்கி வைக்க வந்த கவர்னர் தமிழிசைக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் தமிழிசை வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

தேரோட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார், எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். தெப்ப உற்வசமும், 14-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.

Tags:    

Similar News