புதுச்சேரி
கோப்பு படம்

நகை பணம் திருட்டு

Update: 2022-06-28 08:50 GMT
  • பாண்டி மெரீனா பீச்சில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம்-வெள்ளி நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
  • தனது மகன் படிப்பு செலவுக்காக விநாயகம்பட்டு புதுநகரில் வசிக்கும் பழனியம்மாளிடம் ரூ.45 ஆயிரம் பெற்றார்.

புதுச்சேரி:

பாண்டி மெரீனா பீச்சில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம்-வெள்ளி நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

வில்லியனூர் அருகே ராமநாதபுரம் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி முருகவேணி (வயது33). இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் தனது மகன் படிப்பு செலவுக்காக விநாயகம்பட்டு புதுநகரில் வசிக்கும் பழனியம்மாளிடம் ரூ.45 ஆயிரம் பெற்றார். அப்போது பழனியம்மாள் தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி யதால் அவரையும், அவரது குழந்தைகளையும் முருகவேணி தனது மோட் டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புதுவை வந்தார்.

பழனியம்மாள் தனது குழந்தைகளை கடற்கரைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதால் முருகவேணி அவர்களை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள பாண்டி மெரீனா பீச்சுக்கு அழைத்து சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி தான் கடன் வாங்கி கொண்டு வந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம், பழைய வெள்ளி கொலுசுகளை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு கடற்கரைக்கு சென்றார்.

பின்னர் வந்து மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருப்பதை கண்டு முருகவேணி அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்மநபர்கள் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து பணம் மற்றும் வெள்ளி நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முருகவேணி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News