புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி உடல் கருகி சாவு

Published On 2022-11-11 13:03 IST   |   Update On 2022-11-11 13:03:00 IST
  • துத்திப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் நெருப்பு குழம்பு தெரித்ததில் தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.
  • அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாபாபுகுமார் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரி:

துத்திப்பட்டு இரும்பு தொழிற்சாலையில் நெருப்பு குழம்பு தெரித்ததில் தொழிலாளி உடல் கருகி இறந்து போனார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்ராய். இவரது மகன் ராஜாபாபு குமார் (வயது 22) இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு புதுவை துத்திப்பட்டில் தங்கி அங்குள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக பணி செய்து வந்தார்.

சம்பவத்தன்று ராஜாபாபு குமார் மற்ற தொழிலாளர்களுடன் இரும்பு உருக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அப்போது பர்னசில் இருந்து நெருப்பு குழம்பு திடீரென தெரித்தது. இதில் அருகில் இருந்த ராஜா பாபுகுமார் மற்றும் மற்ற தொழிலாளர்களான பீகாரை சேர்ந்த ராகுல் (20) உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் (20) ஆகியோரின் உடலில் நெருப்பு கொட்டியது. இதில் பலத்த தீக் காயமடைந்த 3 பேரையும் மற்ற தொழிலாளர்கள் மீட்டு பத்துகண்ணுவில் உள்ள ஒரு தனியார் மருத்து கல்லூரி ஆஸ்பத்தியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜாபாபுகுமார் பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து ராஜா பாபு குமாரின் தந்தை ரமேஷ் ராய் சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் ஆகியோர் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அஜாக்கிரதையாக வேலை வாங்கியதால் இந்த சம்பவம் நடந்ததாகவும் எனவே தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News