புதுச்சேரி

கோப்பு படம்.

தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-30 14:17 IST   |   Update On 2023-01-30 14:17:00 IST
  • வில்லியனூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த நிலையில் வழக்கம் போல் லோகநாதன் மது குடித்துவிட்டு வந்தார். இதனை எழிலரசியும், வளப்பு மகன் ராஜ்குமாரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியையும், வளர்ப்பு மகனையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு திட்டினார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது52). கட்டிட தொழிலாளி. இவருக்கு எழிலரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் எழிலரசியின் தங்கை மகனை தத்து பிள்ளையாக வளர்த்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாக லோகநாதன் கட்டிட வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை எழிலரசி கண்டித்து வந்தார். ஆனாலும், லோகநாதன் மது பழக்கத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில் வழக்கம் போல் லோகநாதன் மது குடித்துவிட்டு வந்தார். இதனை எழிலரசியும், வளப்பு மகன் ராஜ்குமாரும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த லோகநாதன் மனைவியையும், வளர்ப்பு மகனையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு திட்டினார்.

இதையடுத்து எழிலரசியும், ராஜ்குமாரும் வீட்டின் பின்புறத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். அந்த நேரத்தில் லோகநாதன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஏணியை போட்டு தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட எழிலரசியும், ராஜ்குமாரும் ஏணியை பறித்து மறைத்து வைத்து விட்டார்கள்.

ஆனாலும் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு லோகநாதன் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி எழிலரசி கொடுத்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News