புதுச்சேரி

கைது செய்யப்பட்ட சங்கர்கணேஷ்.

3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவுடி கைது

Published On 2023-01-24 14:37 IST   |   Update On 2023-01-24 14:37:00 IST
  • மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  • கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி:

ஆரோவில் அருகே குயிலா பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு என்ற ரிலையன்ஸ் பாபு. தொழிலதிபர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு அவரது மகளை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வரும் போது குயிலாப்பாளையம் தாதா மணிகண்டன் தரப்பி னர் பாபுவை கொலை செய்தனர்.

அடுத்த சில நாளில் காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகரான ஜோசப் பொம்மையார்பாளையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த போது வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த 2 கொலை வழக்கு களிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட புதுவை பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர்கணேஷ் (வயது 32) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சங்கர் கணேஷ் அதன்பிறகு 2 கொலை வழக்கு விசாரணை யிலும் ஆஜராகாமல் 3 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்து வந்தார்.

இதையடுத்து வானூர் கோர்ட்டு சங்கர் கணேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு சங்கர் கணேஷை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த சங்கர் கணேஷ் சென்னை, கொடைக்கானல், ஊட்டி, உள்ளிட்ட பல இடங்களில் தஞ்சமடைந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை ரவுடி சங்கர் கணேசை சுற்றி வளைத்த சிறப்பு தனிப்படை போலீசார் அவரை ஆரோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சங்கர் கணேஷை கைது செய்த ஆரோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News