தாண்டவ மூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்த போது எடுத்தபடம்.
மருத்துவ மையம்-அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
- அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நலமான சமுதாயம் அமைப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை-எளிய பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும், பல்வேறு சிகிச்சைகள் சம்பந்தமாக வழி காட்டவும் தாண்டவமூர்த்திகுப்பத்தில் மருத்துவ மையம் அமைக்கப்பட்டது.
இந்த மருத்துவ மையம் திறப்பு விழாவுக்கு தாண்டவ மூர்த்திக்குப்பம் கவுன்சிலர் ராஜாத்தி வெங்கடேசன் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தரராஜன், துணைப் பொது மேலாளர் புகழேந்தி, கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ்.வாசன், கண்டமங்கலம் தி.மு.க. பிரமுகர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மருத்துவ மையத்தை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.