புதுச்சேரி

கோப்பு படம்.

ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி தலைமை நீதிபதியிடம் குடும்பத்தினர் மனு

Published On 2023-11-06 09:43 GMT   |   Update On 2023-11-06 09:43 GMT
  • 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்படவில்லை.
  • பிற மாநிலங்கள் போல புதுவை யிலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் ஆயுள் கைதிகள் 8-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் 14 ஆண்டு தண்டனை முடிந்தும், விடுதலை செய்யப்பட வில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காந்தி, காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த நாளில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

ஆனால் புதுவையில் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த கைதிகளில் சிலர் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இந்த கைதிகளை விடுவிக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் மனு அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று புதுவை தலைமை நீதிபதி சந்திரசேகரனை ஆயுள் தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், 14 ஆண்டுகள் முடிந்தும் பல ஆண்டாக தங்கள் குடும்பத்தி னர் சிறையில் உள்ளனர். நன்னடத்தையை சுட்டிக்காட்டி சிறை நிர்வாகம் விடுவிக்க முடி யாது என கூறி வருகிறது.

இந்த கைதிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சிலர் சிறைக்குள் தொழில்கள் செய்துள்ளனர், அவர்களுக்கு சான்றிதழம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை விடுவிக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. 

Tags:    

Similar News