புதுச்சேரி

கோப்பு படம்.

அரியூரில் இடிக்கப்பட்ட கோவில் மாற்று இடத்தில் கட்டித்தரப்படும்

Published On 2023-11-18 07:30 GMT   |   Update On 2023-11-18 07:30 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
  • விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

புதுச்சேரி:

விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலை பணிக்கு தேவையான இடங்கள் அரசால் கையகப்படுத்தப் பட்டது.

வில்லியனூர் அருகே அரியூரில் 50 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலை, விரிவாக்கத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இடித்து அகற்றினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டனர். கிராம மக்கள் கோரிக்கையை கேட்டறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, இடிக்கப்பட்ட அங்காளம்மன் கோவிலை அரியூரில் வேறு இடத்தில் புதிதாக கட்டித்தருவதாக உறுதியளித்தார்.

இதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News