புதுச்சேரி

கடலூர்-புதுவை சாலையில் கன்னியக்கோவில் பகுதியில் ஏற்பட்ட பள்ளம் காட்சி படம்.

கடலூர்- புதுவை சாலை குண்டும் குழியுமாக மாறியது

Published On 2022-09-02 15:24 IST   |   Update On 2022-09-02 15:24:00 IST
  • புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.
  • இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கும் முக்கியசாலையாக கடலூர்- புதுவை தேசிய கிழக்கு கடற்கரை சாலை இருந்து வருகிறது.

இந்த சாலையில் நிமிடத்திற்கு 100 வண்டிகளுக்கும் மேலாக சென்று வருகிறது.

எப்பொழுதும் இந்த சாலை பரபரப்பாக இருக்கும் சூழ்நிலையில் முறையாக சாலையை பராமரிக்காமலும், சாலை–யை போடாததால் அங்கும் இங்குமாக பள்ளம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பல கோடி செலவில் சீரமைப்பு பணி மட்டுமே நடந்தது.

சில நாட்களிலேயே மீண்டும் சாலை பழுதானது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் சாலை ஓரத்தில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

இதனால் ஏற்கனவே ஏற்பட்ட சிறிய பள்ளங்கள் கூட இப்பொழுது பெரிய பள்ளங்களாக மாறி விட்டது‌. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக கன்னியகோ–யில் காட்டுக்குப்பம், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், தவ–ளக்குப்பம், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் பெரிய பெரிய பள்ளங்களாக இருந்து வருகிறது.

இந்தப் பள்ளங்களால் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் தவறி விழுந்து இதுவரை 3 நாட்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பலர் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புதுவை அரசு பொதுப்பணித்துறை சாலை பராமரிப்பு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை முதல் கட்டமாக சரி செய்ய வேண்டும்‌. பிறகு நிரந்தர சாலையாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News