புதுச்சேரி

ஆரோவிலில் நடந்த 60-வது ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசிய காட்சி.

ஆரோவில் 60-வது ஆட்சி மன்றக்குழு கூட்டம்-தமிழக கவர்னர் ஆர்.என் ரவி தலைமையில் நடந்தது.

Published On 2022-07-12 14:48 IST   |   Update On 2022-07-12 14:48:00 IST
  • ஆரோவில் பவுண்டேஷனின் 60-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தமிழக கவர்னரும் ஆரோவில் சேர்மனுமான ஆர்.என். ரவி தலைமையில் நடந்தது.
  • ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆட்சி மன்றக்குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

ஆரோவில் பவுண்டேஷனின் 60-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் தமிழக கவர்னரும் ஆரோவில் சேர்மனுமான ஆர்.என். ரவி தலைமையில் நடந்தது.

ஆரோவில் அறக்கட்டளை அலுவலகத்தில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் ஆட்சி மன்றக்குழு செயலர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆரோவில் பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆரோவில் வளர்ச்சிதிட்ட பணிகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்ததுள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து ஆரோவில்லில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஆய்வு செய்த நிலையில் ஆரோவில் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது.

Tags:    

Similar News