புதுச்சேரி

பக்தர்கள் காவடி எடுத்து தீமித்த காட்சி.

செல்லிப்பட்டு சீர் செல்வமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

Published On 2023-02-05 06:47 GMT   |   Update On 2023-02-05 06:47 GMT
  • திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.
  • 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புதுச்சேரி:

திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் சீர் செல்வ முருகன் கோவிலில் தைப்பூச தீமிதி திருவிழா நடைபெற்றது.

புதுவையை அடுத்த திருக்கனூர் செல்லிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத சீர்செல்வ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி 56 -ம் ஆண்டு தைப்பூச தீமிதி திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 5 மணிக்கு சீர் செல்வ முருகன் சுவாமி காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 7 மணி அளவில், தைப்பூச தீமிதி, காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்று கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

புதுவை மாநிலத்திலேயே தைப்பூச திருவிழாவில் தீ மிதித்து வழிபடும் ஒரே கோவில் என்பது தனி சிறப்பாகும்.

Tags:    

Similar News