புதுச்சேரி

கோப்பு படம்.

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-01-27 10:25 IST   |   Update On 2023-01-27 10:25:00 IST
  • நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை சொக்கநாதன் பேட்டை இந்திராநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி கட்டிட தொழிலாளி இவரது மகன் குகன்.
  • இந்த நிலையில் முனுசாமியும் அவரது மனைவியும் வடமங்கலத்தில் நடந்த உறவினரின் கிரகபிரவேக நிகழ்ச்சிக்கு சென்றனர்.

புதுச்சேரி:

நிரந்தர வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுவை சொக்கநாதன் பேட்டை இந்திராநகர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி கட்டிட தொழிலாளி இவரது மகன் குகன். இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு புதுவையில் உள்ள ஒரு தனியார் பார்சல் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.

ஆனால் இந்த வேலையில் போதிய வருமானம் இல்லை என்றும் நிரந்தர வேலை கிடைக்க வில்லை என்றும் குகன் தனது பெற்றோரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தார்.

இந்த நிலையில் முனுசாமியும் அவரது மனைவியும் வடமங்கலத்தில் நடந்த உறவினரின் கிரகபிரவேக நிகழ்ச்சிக்கு சென்றனர்.

வீட்டில் குகன் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து முனுசாமியும் அவரது மனைவியும் வீட்டுக்கு வந்த போது அங்கு மின் விசிறியில் குகன் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தின் உதவியுடன் குகனை தூக்கிலிருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து அவரது தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News