புதுச்சேரி

கோப்பு படம்.

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2022-10-21 14:33 IST   |   Update On 2022-10-21 14:33:00 IST
  • கல்மண்டபம் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • இந்த நிலையில் நெட்டப்பாக்கம் அருகே கல் மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

புதுச்சேரி:

கல்மண்டபம் பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை நகர பகுதியில் மட்டுமே கஞ்சா புழக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது கிராம பகுதிகளிலும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது.

குறிப்பாக நெட்டப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதனை அவ்வப்போது போலீசார் கண்டறிந்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெட்டப்பாக்கம் அருகே கல் மண்டபத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் நைசாக நழுவ முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிபிடித்து அவரது சட்டை பையில் சோதனையிட்டனர். அப்போது அவர் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 200 கிராம் கஞ்சாவை அந்த வாலிபர் பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நெட்டப்பாக்கம் ஏரிப்பாக்கம் பழைய காலனியை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி(வயது22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகழேந்தியை கைது செய்தனர்.

Tags:    

Similar News