புதுச்சேரி

சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ரூ.65 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி

Published On 2022-09-19 14:39 IST   |   Update On 2022-09-19 14:39:00 IST
  • மங்கலம் தொகுதி ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், பொன்செல்வரங்கன் நகர், ராஜா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.
  • இப்பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

மங்கலம் தொகுதி ஆரியப்பாளையம் பகுதியில் உள்ள இந்திரா நகர், பொன்செல்வரங்கன் நகர், ராஜா நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 65 லட்சம் செலவில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவிப்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியளார் ரங்கமன்னார் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News