புதுச்சேரி

கோப்பு படம்.

பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும்

Published On 2023-06-21 10:19 IST   |   Update On 2023-06-21 10:19:00 IST
  • தமிழ் சங்கம் வலியுறுத்தல்
  • புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை தமிழ் சங்கம் சார்பில் தமிழ்வழி கல்வி கருத்தரங்கம் தமிழ் சங்கத்தில் நடந்தது.

சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, தினகரன் முன்னிலை வகித்தனர். உலக தமிழ் பேரமைப்பு பொதுச்செயலாளர் தமிழ்மணி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன ஓய்வுபெற்ற இயக்குனர் சம்பத் கருத்துரை வழங்கினார்.

சங்க பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார். கருத்தரங்கில், புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News