புதுச்சேரி

சுடுமண் சிற்ப பயிற்சி பெரும் துருக்கி நாட்டு மாணவர்கள்.


புதுவையில் சுடுமண் சிற்ப பயிற்சி பெற்ற துருக்கி நாட்டு மாணவர்கள்

Update: 2022-08-18 10:56 GMT
  • மிகுந்த ஆர்வத்துடன் கற்று வரும் துருக்கி நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.
  • அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிநாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவையில் டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பக்கலை பாரம்பரிய கலையாக உள்ளது.

சிற்பக்கலை குறித்து வில்லியனூர் கணுவாப்பேட்டை கிராமத்தில் தனி பயிற்சி கூடம் அமைத்து பயிற்சி அளித்து வருகிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி.

துருக்கி நாட்டை சேர்ந்த மாணவர்கள் தற்போது பயிற்சி முகாமில் பங்கேற்று உள்ளனர். துருக்கி நாட்டில் உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி மற்றும் கலாச்சார பயணமாக புதுவை வந்துள்ளனர். இவர்கள் இடையன்சாவடி கிராமத்தில் அங்குள்ள மாணவர்களுடன் 11 நாட்கள் தங்கி புதுவையின் கல்வி மற்றும் கலாச்சாரத்தை பயில்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய கலையான சுடுமண் சிற்பங்களை செய்வது எப்படி என ஆர்வத்துடன் பயின்றனர்.

மிகுந்த ஆர்வத்துடன் கற்று வரும் துருக்கி நாட்டு மாணவர்கள் தங்களது நாட்டிற்கு சென்று களிமண் கொண்டு பொம்மைகளை செய்ய மற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிப்போம் என தெரிவித்தனர்.

அழிவின் விளிம்பில் உள்ள சுடுமண் சிற்ப கலையை மீட்டெடுக்கும் வகையில் உள்ளூர், வெளிநாட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என பயிற்சியாளர் முனுசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News