புதுச்சேரி

மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா


நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம்- மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேச்சு

Published On 2022-06-25 08:07 GMT   |   Update On 2022-06-25 16:08 GMT
  • கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம்.
  • இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் பூச்சி கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.

நிறுவன வளாகத்தில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா குத்துவிளக்கேற்றி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

கொரோனா பெரும் சவாலாக உருவெடுத்தது. அப்போது நாமே ஆராய்ச்சி செய்து, தடுப்பூசியை தயாரித்து வழங்கினோம். 130 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டில் தடுப்பூசியை கொண்டு சேர்ப்பது பெரும் சாதனையான விஷயம்.

இதில் பிரதமர் மிகுந்த அக்கறை காட்டினார். ஒத்துழைத்த ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் கடுமையான உழைப்பால் நமக்கு தடுப்பூசி கிடைத்தது. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கு நாம் தடுப்பூசி வழங்கியுள்ளோம்.

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியம். புதுவை மாநிலம் ஒரு ஆராயச்சி மையமாக திகழ்வதற்கு என் வாழ்த்துக்கள்.

புதுவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியும், அரசும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

இந்த ஆராய்ச்சி நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., இந்திய மருத்துவ கவுன்சில் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்க்கவ், பூச்சி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அஸ்வினிகுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News