புதுச்சேரி

தேசபக்தி ஓவியங்கள் வரைந்த மாணவிகள்.

5 மீட்டர் கதர் துணியில் அரசு பள்ளி மாணவிகளின் தேசபக்தி ஓவியங்கள்

Published On 2022-08-13 11:09 GMT   |   Update On 2022-08-13 11:09 GMT
  • 30 மாணவிகள் ஒருங்கிணைந்து 30 விதமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர்.
  • தேசியத்தை வலியுறுத்தியும் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் ஓவியங்கள் வரையபெற்றுள்ளன.

புதுச்சேரி:

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழாவையொட்டி புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முத்தியால்பேட்டை சோலை நகரில் உள்ள சின்னாத்தா அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவிகள் 5 மீட்டர் கதர் துணியில் தேச பக்தி ஓவியங்களை வரைந்துள்ளனர்.

30 மாணவிகள் ஒருங்கிணைந்து 30 விதமான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். தேசியத்தை வலியுறுத்தியும் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் இந்த ஓவியங்கள் வரையபெற்றுள்ளன. பள்ளி முதல்வர் ஹர்பிதா தாஸ், சமூக அறிவியல் ஆசிரியை செலின் அண்ட்டனெட் ஆகியோர் மாணவிகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.

இந்த ஓவியங்களை பள்ளியில் நடைபெறும் 75-வது சுதந்திர தின விழாவில் கண்காட்சியாக வைக்கின்றனர்.

Tags:    

Similar News