புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்- போலீசார் விசாரணை

Published On 2022-10-11 10:15 IST   |   Update On 2022-10-11 10:15:00 IST
  • புதுவை முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார். இவரது வீட்டு முகவரிக்கு பிரான்சில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உன்னையும் உன் குடும்பத்தினரையும் 3 மாதத்திற்குள் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டு இருந்து. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. இது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்தியால் பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு எதிராக எம்.எல்.ஏ. போராடியதால் அது தொடர்பாக கொலைமிரட்டல் கடிதம் வந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News