புதுச்சேரி

பிரத்யேக பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தை கண்டுபிடிக்க உதவும் நாய்கள்

Published On 2024-04-01 08:45 GMT   |   Update On 2024-04-01 08:45 GMT
  • மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.
  • இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.

புதுச்சேரி:

வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம் எப்போதும் உண்டு. மனிதர்களின் நண்பன் போல் எப்போதும் நாய்கள் சுற்றி சுற்றியே வரும்.

மனிதர்களிடம் விசுவாசமாக இருக்கும். மோப்ப சக்தி நாய்களுக்கு அதிகளவில் உண்டு. குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்கள் போலீசாருக்கு கைகொடுக்கும்.

இப்போது ஆய்வு அதைவிட அதிகமாகவும் மனிதர்களுக்கு உதவ முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாய்கள் மனிதர்களுக்கு வரவிருக்கும் மன அழுத்தத்தை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் மூலம் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நபருக்கு முன் கூட்டியே மருத்துவ சிகிச்சைகளை அளிக்கலாம். மனிதர்களை மோப்பம் பிடித்து சுவாசத்தின் மூலம் இதனை நாய்கள் கண்டுபிடிக்கிறது.

இதற்காக நாய்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை பேராசிரியர் லாராகிரோஜா கூறியுள்ளார்.

மோப்ப சுவாச பயிற்சி 25 நாய்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் ஐவி மற்றும் கால்லி ஆகிய இரண்டு நாய்கள் இயல்பாகவே மோப்ப சக்தியில் திறம்பட இருந்தது.

இரண்டு நாய்களும் மன அழுத்தத்தை கண்டுபிடிப்பதில் 90 சதவீதம் சிறப்பாக செயல்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை பயிற்சிகள் மூலம் ஐவி 74 சதவீதமும், கால்லி 81 சதவீதமும் துல்லியமாக முடிவுகளை காட்டியது. மேலும் இது போல் ஆய்வு தொடர்ந்து நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News