புதுச்சேரி

வாடகை வழங்காததால் கடைமுன் பெண் தர்ணா

Published On 2022-06-08 10:56 IST   |   Update On 2022-06-08 10:56:00 IST
  • வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.

புதுவை கோவிந்தசாலை கல்வே பங்களா பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு சொந்தமான கடை அண்ணா சாலையில் உள்ளது.

இந்த கடையை சிவக்குமார் என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு வாடகைக்கு விட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் மேகநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அதன் பிறகு கடை வாடகையை சிவக்குமார் கலைச்செல்வியிடம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கலைச்செல்வி பல முறை கடைக்கு நேரில் சென்று கேட்டும் வாடகை பாக்கி வழங்காததால் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதன் பிறகும் வாடகை பாக்கியை வழங்கவில்லை. வாடகை பாக்கியை வழங்ககோரியும் கடையை காலி செய்ய வலியுறுத்தியும் கலைச்செல்வி நேற்று இரவு கடைமுன் தனி ஆளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News