புதுச்சேரி

மதிய உணவினை செந்தில்குமார் எம்.எல்.ஏ. சாப்பிட்டு சோதனை செய்த காட்சி.

அரசு பள்ளியில் தரமற்ற மதிய உணவு-எம்.எல்.ஏ.விடம் மாணவர்கள் குற்றச்சாட்டு

Published On 2022-08-11 09:17 GMT   |   Update On 2022-08-11 09:17 GMT
  • அரசு பள்ளிகளில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஒவ்வொரு பள்ளியாக சென்று தேசிய கொடியை ஏற்றி வந்தார்.
  • அங்குகொடி ஏற்றிய பிறகு அங்கிருந்து மாணவர்கள் கூட்டமாக தட்டில் உணவை எடுத்து வந்தனர்.

புதுச்சேரி:

75-வது சுதந்திர தின விழாவை ஒட்டி பாகூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஒவ்வொரு பள்ளியாக சென்று தேசிய கொடியை ஏற்றி வந்தார்.

அதுபோல பாகூர் பாரதி அரசு பள்ளிக்கு இன்று காலை செந்தில்குமார் எம்.எல்.ஏ. கொடியேற்ற சென்றார். அங்குகொடி ஏற்றிய பிறகு அங்கிருந்து மாணவர்கள் கூட்டமாக தட்டில் உணவை எடுத்து வந்தனர். அவர்கள் தொடர்ந்து தர மற்ற உணவை வழங்கி வருகின்றனர். உணவு சரியில்லை என்று பலமுறை கூறியும் அதே தரமற்ற உணவை தான் வழங்கி வருகின்றனர். ஒரு சில நாட்களில் மோசமான துர்நாற்றம் வீசும் உணவு அளிக்கிறார்கள் என்று சரமாரியாக குற்றச்சாட்டு கூறினர். உணவுக்கூடம் தரமற்றதாக உள்ளது துர்நாற்றம் வீசுகிறது. உப்பு போடுவதில்லை என்று உணவை எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர்

இதையடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. உடனடியாக உணவை வாங்கி அங்கேயே சாப்பிட்டு பார்த்து உணவு சரியில்லை தான் என்று ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இது சம்பந்தமாக முதல்வரிடமும் சட்டசபையிலும் முறையிட்டு நல்ல முடிவு எடுக்கிறேன் என்று மாணவர்களுக்கு உத்திரவாதம் அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News