புதுச்சேரி

மாணவர்கள் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலால் துறை துணை ஆணையர் சுதாகருக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

மாணவர்கள் பதவி ஏற்பு விழா

Published On 2022-10-18 09:41 IST   |   Update On 2022-10-18 09:41:00 IST
  • புதுவை ஊசுடு அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க பள்ளியில் தேர்தல் நடைபெற்றது.
  • சிறப்பு விருந்தினராக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை ஊசுடு அகரத்தில் உள்ள ஸ்ரீ பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், துணை தலைவர்களை தேர்ந்தெடுக்க பள்ளியில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் வெற்றிப் பெற்ற மாணவர்களின் பதவியேற்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் தாளாளர் டாக்டர். சந்தானகிருஷ்ணன் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினராக புதுவை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிகள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு–வராக பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News