புதுச்சேரி

பேரணியை கராத்தே சுந்தர்ராஜன் தொடங்கி வைத்த காட்சி.

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-25 14:42 IST   |   Update On 2023-01-25 14:42:00 IST
  • புதுவை கவுண்டன்பா ளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு நல பணித்திட்டம் மற்றும் சமுதாய நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
  • வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி முன்னேற்பாடாக மாணவர்கள் ஓவியப் போட்டிகள் நடைபெற்று காட்சிப்படுத்தப்பட்டது.

புதுச்சேரி:

புதுவை கவுண்டன்பா ளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு நல பணித்திட்டம் மற்றும் சமுதாய நலப்பணி திட்டம் மாணவர்கள் இணைந்து 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி முன்னேற்பாடாக மாணவர்கள் ஓவியப் போட்டிகள் நடைபெற்று காட்சிப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நல பணி திட்ட அலுவலர் ஜெயந்தி, சமுதாய நலத்திட்ட அலுவலர் முகிலரசி மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் செய்திருந்தனர்.

Tags:    

Similar News