புதுச்சேரி

மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-11-29 14:33 IST   |   Update On 2022-11-29 14:33:00 IST
  • தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.
  • ஆர்ப்பாட்டத்துக்கு பிரவீன்குமார் தலைமை வகித்தார்.

புதுச்சேரி:

தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பிரவீன்குமார் தலைமை வகித்தார். இளவரசி, ஜெயபிரகாஷ், ஆனந்த் முன்னிலை வகித்தனர். ஆனந்தன், ராமசாமி, கொளஞ்சியப்பன் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், சரவணன், உமாசாந்தி, சீனிவாசன், தமிழ்செல்வன், கலியமூர்த்தி, சரவணன், ராம்ஜி, உலகநாதன், பிரபுராஜ், மதிவாணன், சங்கர், தட்சிணாமூர்த்தி, ரமேஷ், அரிகிருஷ்ணன், குப்புசாமி, பிரவீன், சங்கர், நாகராஜன், சுப் பிரமணியன், செங்கதிர், நடராஜன், பார்த்தசாரதி, சிவகாமி, பிரேம்குமார், கந்தன், சுரேந்திரன், கோதண்டபாணி, கலியன், ரஞ்சித்குமார், லீலாவதி அன்புமணி, நாகராஜ், ஜெர்மண், கவுசிகன், வினாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் சுகாதார சீர்கேடை களைய வேண்டும். விடுதிகளில் உள்ள கழிவறைகளை சீரமைத்து திறக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உடனுக்குடன் சமைத்து வழங்க வேண்டும். மாணவர் இலவச பஸ்சை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் சங்க நிர்வாகி சஞ்சய்சேகரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News