புதுச்சேரி
சீருடை வழங்காததை கண்டித்து மாணவர் சங்கத்தினர் மறியல் செய்த காட்சி.
- இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகே மறியல் நடந்தது.
- பிரதேச செயலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
இந்திய மாணவர் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகே மறியல் நடந்தது.
போராட்டத்திற்கு பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். பிரதேச குழு நிர்வாகிகள் ஸ்டிபன் ராஜ், வந்தனா,சிபி, அபிஜித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடை வழங்காததை கண்டித்தும், மாணவர் பஸ்சை இயக்காதது, தமிழ் பாடப்புத்தகம் வழங்காததை கண்டித்தும் மறியல் போராட்டம் நடந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.