புதுச்சேரி
குடிசை மாற்று வாரிய ஊழியர் நல சங்கம் சார்பில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற காட்சி.
குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- புதுவை குடிமை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை இன்று தொடங்கினர்.
- அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை குடிமை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்துக்கு சங்கத்தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார்.அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
56 மாத நிலுவை சம்பளம் தர வேண்டும். சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும். மாதந்தோறும் ஊதியம் தரவேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.