புதுச்சேரி

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற காட்சி.

null

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Update: 2022-12-01 05:04 GMT
  • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
  • 3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திற னாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

இதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர், கை கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News