புதுச்சேரி

ஆதரவற்ற குழந்தைகளுடன் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்ட காட்சி.

ஆதரவற்ற குழந்தைகளுடன் விளையாட்டு போட்டி

Published On 2022-06-25 14:41 IST   |   Update On 2022-06-25 14:41:00 IST
  • பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
  • மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்

புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார் குப்பத்தில் உள்ள எஸ். ஓ. எஸ். பள்ளி மாணவர்களுக்கும், பிற ஆதரவற்ற குழந்தைகள் மைய மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் இணைந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டுப் போட்டிகளை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதில், வாலிபால், ஓட்ட பந்தயம், கோ கோ, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர் களுக்கான பரிசளிப்பு விழா, நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை குழந்தைகள் நலக்குழு தலைவர் சிவசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சுலோச்சனா வாழ்த்தி பேசினார். வாலிபால் போட்டியில் எஸ். ஓ. எஸ். குழந்தைகள் கிராமத்தை சேர்ந்த அணி முதல் இடமும், ஜாலி ஹோம் குழந்தைகள் அணி 2-ம் இடமும் பிடித்தனர்.

கோ கோ விளையாட்டுப் போட்டியில் எஸ். ஓ. எஸ். குழந்தைகள் அணி முதல் இடமும், பிரசிடென்சி மேல்நிலைப் பள்ளியின் குழந்தைகள் அணி இரண்டாம் இடமும் பெற்றனர். குழந்தை களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் மகாத்மா காந்தி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பரிசுகளைப் பெற்றனர். நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியின், ஏற்பாடுகளை எஸ். ஓ. எஸ். குழந்தைகள் கிராமத்தின் இயக்குனர் ஜார்ஜ் செய்திருந்தார்.

Tags:    

Similar News