புதுச்சேரி

விளையாட்டு போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளார்.

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பாராட்டு

Published On 2023-01-28 09:02 GMT   |   Update On 2023-01-28 09:02 GMT
  • புதுவை அரசு பள்ளி கல்வித்துறை இயக்ககம் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி சார்பில் கோரிமேடு காவல்துறை மைதானத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள்தொடக்க விழா நடைபெற்றது.
  • இந்திய திருநாடு விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ- மாணவியர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் கேலோ இந்தியா என்ற திட்டத்தை துவக்கியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை அரசு பள்ளி கல்வித்துறை இயக்ககம் விளையாட்டு மற்றும் இளைஞர் பணி சார்பில் கோரிமேடு காவல்துறை மைதானத்தில் மாநில அளவில் பள்ளிகளுக்கான தடகள போட்டிகள்தொடக்க விழா நடைபெற்றது.

இந்த தடகளப் போட்டிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

முன்னதாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

இந்திய திருநாடு விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பள்ளி மாணவ- மாணவியர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்கும் வகையில் கேலோ இந்தியா என்ற திட்டத்தை துவக்கியுள்ளார்.

அதன்படி இந்தியாவில் விளையாட்டில் ஆர்வ முள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் கூட பாரத பிரதமர் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடையே தேர்வு குறித்த அச்சம் போக்கவும் அவர்கள் தேர்வினை பயமின்றி எதிர்கொள்ளவும் கலந்துரையாடினார்.

புதுவை மாநிலத்திலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கி பள்ளி மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் முதல்-அமைச்சர் அறிவித்த மாணவர்களுக்கான மடிக்கணினி, மிதிவண்டி உள்ளட்டவை விரைவில் வழங்கப்பட உள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்ள வந்திருக்கும் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை விளையாட்டில் செலுத்தி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசினார்.

Tags:    

Similar News