புதுச்சேரி
பாகூரில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடந்த காட்சி.
பாகூரில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
- பாகூரில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
- இந்த மண் சேகரிக்கும் பணியானது அடுத்த ஒரு வார காலத்திற்கு பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் இருளன்சந்தை கிராமங்களில் நடைபெற உள்ளது
புதுச்சேரி:
புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, வேதியியல் பிரிவு சார்பில் பாகூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள மண்ணை பரிசோதனை செய்யும் பொருட்டு மண் மாதிரி சேகரிப்பு முகாம் பாகூரில் நடைபெற்றது. இந்த மண் சேகரிக்கும் பணியானது அடுத்த ஒரு வார காலத்திற்கு பாகூர், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் இருளன்சந்தை கிராமங்களில் நடைபெற உள்ளது.
இந்த பணியில் பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், வேளாண் அலுவலர் பரமநாதன், உதவி வேளாண் அலுவலர் கோபால் மற்றும் உதவியாளர் திருநீலகண்டன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர்.