புதுச்சேரி

இறந்த லட்சுமி யானைக்கு சாந்தி ஹோமம் நடந்த காட்சி.

யானை லட்சுமிக்கு சாந்தி ஹோமம்

Published On 2023-01-11 14:48 IST   |   Update On 2023-01-11 14:48:00 IST
  • புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.
  • அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.

புதுச்சேரி:

புதுவை மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி 42 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்தது.

இதையடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது. காலை 9 மணிமுதல் 12.30 மணி வரை கோவிலில் கணபதி ஹோமம் சாந்தி ஹோமம் நடைபெற்றது. யானை ஆன்மா சாந்தி அடையவும், புதுவை மக்களின் நன்மைக்காகவும் இந்த ஹோமம் செய்யப்பட்டது.

ஹோமத்தில் வைக்கப்பட்ட கலசநீர் யானை நின்றஇடம், கொட்டில், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அறங்காவலர் குழு தலைவர் ராமச்சந்திரன், நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் ஹோமத்தை நடத்தினர்.

யானையின் இறுதி சடங்கு செய்த போது அதன் தந்தம் அப்புறப்படுத்தப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில் வனத்துறையிடம் இருந்த லட்சுமியின் தந்தத்தை வாங்கி பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News