புதுச்சேரி

ராஜ்பவன் தொகுதியில் கழிவு நீர் குழாய் புதுப்பிக்கும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்த காட்சி.

கழிவுநீர் குழாய் புதுப்பிக்கும் பணி லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-25 15:07 IST   |   Update On 2022-06-25 15:07:00 IST
  • ராஜ்பவன் தொகுதியில் பழுதடைந்த பிராதன கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்க சுமார் ரூ.47 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
  • இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

ராஜ்பவன் தொகுதியில் பழுதடைந்த பிராதன கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்க சுமார் ரூ.47 லட்சத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கழிவுநீர் உட்கோட்ட பொறியாளர் வைத்தியநாதன், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பணியால் முத்தியால்பேட்டை சோலைநகர், கணேஷ் நகரில் அடிக்கடி ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்புகள் சீராகும்.

Tags:    

Similar News