புதுச்சேரி

உருளையன்பேட்டை ராஜா நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு செய்த காட்சி

ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு

Published On 2022-06-15 13:59 IST   |   Update On 2022-06-15 13:59:00 IST
  • உருளையன்பேட்டை ராஜா நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் இடத்தை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
  • புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு ராஜா நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்

புதுச்சேரி:

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு ராஜா நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ. நேரு, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலுவை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து உருளையன்பேட்டை ராஜா நகர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய ஆய்வு நடந்தது. நேரு எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க போதுமான இடவசதி உள்ளதா? ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது அப்பகுதியை சேர்ந்த அஞ்சலிதேவி, கோபால், பாரதி, சவுந்தர்ராஜன், பிரபாத், குமார், சசி, குமார், கோவிந்தராஜ், கபிலன், ஜோசப்விஜய், சுரேஷ், ஆனந்தவள்ளி, சார்லத், கவுரி, பிரேமா, கவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News