புதுச்சேரி

அதிகாரிகளுடன் சென்று பஸ் நிலைய கட்டுமான பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி.

பஸ் நிலைய கட்டுமான பணி மீண்டும் செயல்படுத்த செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-12-02 04:19 GMT   |   Update On 2023-12-02 04:19 GMT
  • ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.
  • பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி:

பாகூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசின் ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.1.63 கோடி மதிப்பில் பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

ஆனால், கட்டுமானங்களுக்கான அஸ்திவாரம் அமைக்கப் பட்ட நிலையில் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டதால், அந்த ஒப்பந்த்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் கள் சந்திரசேகர், பாலசுப்ரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று பஸ் நிலைய கட்டுமான பணி நடைபெற்ற பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பஸ் நிலைய திட்டத்தை மீண்டும் துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Tags:    

Similar News