புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் அகில இந்திய சமுதாய மருத்துவ துறை புதுச்சேரி பிரிவு சார்பில் நடந்த மாநில கருத்தரங்கில் தொற்றா நோய் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய ஆய்வறிக்கையை முதல்வர் அனில் பூர்த்தி எக்கோ இந்தியா டாக்டர் சந்தீப் பல்லா ஆகியோர் வெளியிட அதனை டாக்டர் கவிதா, துணை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்ட காட்சி.

பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கருத்தரங்கம்

Published On 2023-11-18 06:10 GMT   |   Update On 2023-11-18 06:10 GMT
  • அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.
  • ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

புதுச்சேரி:

கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனையில் அகில இந்திய சமுதாய மருத்துவத்துறை புதுச்சேரி பிரிவு சார்பில் மாநில கருத்தரங்கம் கல்லுாரி அரங்கில் நடந்தது.

கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். துறை தலை வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். டெல்லி எக்கோ இந்தியா அமைப்பின் பேராசிரியர் சந்தீப் பல்லா சிறப்புரையாற்றி ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதனை அனில் பூர்த்தி பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து இருதய நிபுணர் மார்க் மாரடைப்பு ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித் தும், ஜிப்மர் மனநல மருத் துவர் பாலாஜி போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் தொற்றா நோய், அதனால் ஏற்படும் மனநல பிரச்சினை குறித்தும் விளக்கம் அளித்தனர்.

காணொலி மூலம் டாட்டா மெமோரியல் மருத்துவ பேராசிரியர் சுபிதா பாட்டீல்,புற்று நோய் ஆரம்ப நிலை குறித்தும் சிகிச்சைக்கான பொது மக்களுக்கு விழிப்புணர்வு குறித்த விபரங்களை கூறி மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கருத்தரங்கில் பிம்ஸ் மருத்துவ சமுதாய டாக்டர் ஸ்டாலின் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News