புதுச்சேரி

 பயிற்சி முகாமினை சமூக நலத்துறை இயக்குனர் குமரன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

பேபி சாரா இல்லத்தில் சுய வழிகாட்டுதல் 2 நாள் பயிற்சி முகாம்

Published On 2023-12-01 09:37 GMT   |   Update On 2023-12-01 09:37 GMT
  • சமூக நலத்துறை இயக்குனர் குமரன் தொடங்கி வைத்தார்
  • சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பு பகுதியில் உள்ள பேபி சாரா இல்லத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மையம், சுய வழக்காடுதல் மன்றம் மற்றும் பரிவார் அமைப்பு ஆகியவை இணைந்து சுய வழிகாட்டுதல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.  பயிற்சி முகாம் தொடங்கியது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய செயலாளர் ஸ்டீபன்ராஜ் வரவேற்றார்.

புதுவை சமூக நலத்துறை இயக்குநர் குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

பேபி சாரா இல்ல துணை நிறுவனர் விக்டோரியா முன்னிலை வகித்தார். திருச்சி குழந்தைகள் நலக் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் வக்கீல் பவுலின்சோபியா ராணி, சுய வழக்காடு பயிற்சியாளர் நிர்மலா ஆகியோர் பயிற்சிகளை நடத்து கின்றனர்.

வீராம்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அல்லி மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். சமூக சேவகர் அய்யம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக சேவகர் முருகசாமி, பேபி சாரா இல்ல அலுவலர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

முடிவில் ஒருங்கிணைந்த புணர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு மைய தன்னார்வலர் நித்யா ஜெனிபர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News