புதுச்சேரி

குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்கள்.

குடோனில் பதுக்கி வைத்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-07-04 09:06 GMT   |   Update On 2022-07-04 09:06 GMT
  • கரையாம்புத்தூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்த ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • கரையாம்புத்தூர் புற காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

கரையாம்புத்தூரில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்த ரூ.2¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரையாம்புத்தூர் புற காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையாம்புத்தூரை அடுத்த சொர்ணாவூர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையை சோதனை செய்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

அதனை பிரித்து பார்த்த போது தடை செய்யப்பட்ட புகையிலை - ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் மளிகை கடையில் இருந்த குடோனை திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மூட்டை மூட்டையாக புகையில்லை மற்றும் ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். இதையடுத்து ரூ.2¼ மதிப்புள்ள அந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர்ஜெயக்குமார் (வயது60) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News