புதுச்சேரி
பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
- வில்லியனூர் அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உருவையாறு அருகில் சங்கரபாரணி ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே மணல் கடத்திய மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர் அருகே உருவையாறு அருகில் சங்கரபாரணி ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்தி செல்லப்படுவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்தும் மணல் கடத்தி சென்றவர்கள் மினி லாரியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து போலீசார் மணலுடன் அந்த மினி லாரியை பறிமுதல் செய்து வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணலை கடத்தி செல்ல பயன்படுத்திய மினி லாரி யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், தப்பியோடியவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.