புதுச்சேரி
நைனார்மண்டபம்நா கமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய காட்சி.
நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் விழா
- புதுவை நைனார்மண்ட பம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது
- விழாவையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தது
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்ட பம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் விழா வருகிற 22-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.
வருகிற 15-ந் தேதி 108 பால்குட ஊர்வலம், 20-ந் தேதி முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான 22-ந் தேதி நடைபெறும் செடல் விழாவில் 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு தங்க ஊசி பேழையுடன் ஊர்வலம் நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு செடல் ஊர்வலமும், தேர்பவனியும் நடக்கிறது. 23-ந் தேதி மஞ்சள்நீராட்டு, 24-ந் தேதி விடையாற்றி உற்சவம், ஆகஸ்டு 5-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.