புதுச்சேரி

அறிவியல் கண்காட்சி நடைபெற்ற காட்சி.

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2022-09-17 09:19 GMT   |   Update On 2022-09-17 09:19 GMT
  • புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
  • பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசு கல்வி துறையின் அறிவுறுத்தின் பேரில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும், சிந்தனையும் தூண்டும் வகையில் நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் 200 -க்கு மேற்பட்ட அறிவியல் படைப்பு களை கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளியின் துணைமுதல்வர் ஆஷாராணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண்காட்சியை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் கண்டுகளித்தனர்.

பின்னர் இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை என மாணவர்களின் படைப்புகளை மதிப்பீட்டு, குழு ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.

Tags:    

Similar News