திருவண்டார்கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் தனியார் பஸ்சில் ஏற முடியாமல் தவித்த பள்ளி-கல்லூரி மாணவர்கள்.
பஸ்சில் ஏற முடியாமல் தவித்த பள்ளி-கல்லூரி மாணவர்கள்
- புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளியநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.
- இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில எல்லையில் உள்ள மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில், கலிதீர்த்தாள்குப்பம், நல்லூர், பள்ளி யநேலியனூர், கொத்தபுரிநத்தம், சன்னியாசிகுப்பம், ஆகிய பகுதியை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கல்வித்துறை இயக்கி வந்த ஒரு ரூபாய் பஸ்களில் பயணம் செய்து வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு ரூபாய் பஸ் நிறுத்தப்பட்டது.
விரைவில் இந்த பஸ்கள் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
ஒரு ரூபாய் பஸ்கள் இயக்கப்படாததால் மதகடி ப்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பள்ளி-கல்லூரி மாணவர்கள் தனியார் பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த பஸ்களில் காலை-மாலை வேலைகளில் வேலைக்கு செல்வோர் அதிகம் பேர் புதுவைக்கு வந்து செல்வதால் மாணவர்கள் அதில் பயணம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது.
அடுத்த பஸ்சில் அவர்கள் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகப்படியான கட்டணம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனவே விரைவில் ஒரு ரூபாய் பஸ் போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.