புதுச்சேரி

கோப்பு படம்.

null

ரங்கசாமிக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கலாம்- முன்னாள் எம்.பி. ராமதாஸ் ஆவேசம்

Published On 2022-12-28 08:03 GMT   |   Update On 2022-12-28 09:55 GMT
  • புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.
  • கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

புதுவையில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். மாநில அந்தஸ்து கொடுத்தால் மட்டுமே நலத்திட்டங்களைக் கொண்டு வர முடியும் என முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

மாநில அந்தஸ்து பெறுவது பற்றி உறுதியாக இருந்தால் அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக முதல்-அமைச்சர் இறங்கி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

கூட்டணியில் உள்ள பா.ஜனதாவிடம் மாநில அந்தஸ்து பற்றி பேசி ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டும். அமைச்சரவையில் மாநில அந்தஸ்து பற்றி ஒருமனதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஒருவேளை அவரின் சகோதரியான கவர்னர் மன உளைச்சலை தீர்த்து விட்டதால் முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து பற்றி இனிமேல் பேச மாட்டாரா?

முதல்-அமைச்சர் நிலைப்பாடு தெரியாமல் புதுவையில் தேவையின்றி பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மாநில அந்தஸ்து கோரி போராட்டம், பந்த் என சொல்வது முதிர்ந்த அரசியலாக தெரியவில்லை. எல்லாம் நாடகமயமாகி வருகிறது. இது மாநில சட்ட ஒழுங்கை பாதித்து மக்களை பிளவுபடுத்தி மாநில அந்தஸ்துபிரச்சினையை திசை திருப்பும்.

முதல்-அமைச்சருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதில் உண்மையான அக்கறை இல்லை என தோன்றுகிறது. அதிகாரிகளும், கவர்னரும் தனக்கு வேண்டிய காரியங்களில் ஒத்துழைத்தால் போதும் என்ற நிலையில் அவர் இருப்பதாக தெரிகிறது.

மின்துறை தனியார்மய ஊழல், மதுபான தொழிற்சாலை ஊழல், குப்பை டெண்டர் ஊழல், சாலை ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் மாநில அந்தஸ்து அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் என மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.

எனவே எதையாவது முதல்-அமைச்சர் வெளிப்படையாக மக்களிடம் சொல்ல வேண்டும். புதுவை அமைதியாக வேண்டும். இல்லாவிட்டால் மாநில அந்தஸ்து நாடகத்திற்காக முதல்-அமைச்சர் சங்கரதாஸ்சாமி விருதை வழங்கலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News