புதுச்சேரி

சின்ன வாயக்கால் மேம்படுத்தும் பணியை நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ரூ.8 கோடியில் சின்ன வாய்க்கால் மேம்படுத்தும் பணி நேரு எம்.எல்.ஏ. ஆய்வு

Update: 2022-06-28 09:15 GMT
  • உருளையன்பேட்டை தொகுதியில் சின்ன வாய்க்கால் வீதி அண்ணாசாலை முதல் செஞ்சி சாலை வரை நகரின் முக்கியமான பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உள்ளது.
  • இந்த வாய்க்கால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.8 கோடியில் நவீனப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை தொகுதியில் சின்ன வாய்க்கால் வீதி அண்ணாசாலை முதல் செஞ்சி சாலை வரை நகரின் முக்கியமான பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலாக உள்ளது.

இந்த வாய்க்கால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் ரூ.8 கோடியில் நவீனப்படுத்தி மேம்படுத்தப்பட உள்ளது. மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலர் அருண், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொதுப் பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மின் துறை செயற்பொறியாளர் கனியமுது, நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சம்பந்தம், திருஞானம், வாசு, வைத்தியநாதன், மின்துறை உதவி பொறியாளர் கண்ணன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வில், அப்பகுதியிலிருந்து வாய்க்காலில் வெளியேறும் கழிவு நீரை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மழை காலங்களில் மட்டும் மழைநீர் ஓட வேண்டிய நிலை மாறி, நாள்தோறும் கழிவுநீர் செல்லும் வாயக்காலாக மாறியுள்ளதை தடுக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அதிகாரிகள் கழிவு நீர் கலப்பதை தடுக்கக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணிகளை விரைந்து முடித்து, நகரின் முன்மாதிரியான மழைநீர் வடிகால் வாய்க்காலாக மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.

Tags:    

Similar News